வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது.
இதன்படி, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு என்று சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் குறைந்தது 90 வினாடிகள் ஓடக் கூடியதாக இருக்க வேண்டும்.
இவ்வாறான வீடியோக்களின் இடையில் மாத்திரம் 15 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும.
வழக்கமாக யூடியூப் வீடியோக்களில் ஆரம்பத்திலேயே விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது வாசகர்களுக்கு இடையூறாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விளம்பரங்கள் அனைத்தும் பாரம்பரிய தொலைக்காட்சிகளில் வெளியாகும் விளம்பரங்களைப் போன்றே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பரங்களின் ஊடாக கிடைக்கும் லாபத்தில் 55 சதவீத தொகையை வீடியோக்களை வெளியிடும் நபர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் விளம்பரம் மூலமாக மட்டும் சுமார் 700 கோடி டாலர்(96 சதவீதம்) அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் வளர்ச்சியின் பெரும்பகுதி, கைபேசி மூலமாக வரும் விளம்பர வருவாய் என தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவரத்தின்படி, நாளொன்றுக்கு 5 கோடி மக்கள் பேஸ்புக்கில் வீடியோக்களை காண்கின்றனர். அவர்கள் அனைவரும் வீடியோக்களை பார்க்கும் நேரம் அன்றாடம் சராசரியாக 10 கோடி மணிநேரமாக உள்ளது. இந்த பயன்பாட்டை சாதகப்படுத்திக் கொள்வதுடன் வருமானமாக்கும் முயற்சியில் பேஸ்புக் தற்போது களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Popular Posts
-
இன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேடுபொறிகள் (Search Engine) காணப்படுகின்றன. இவற்றில் இன்றுவரை முதல்வனாக திகழ்வது கூகுள் ஆகும...
-
அனைவருக்கும் தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு சில படங்கள் அழகு குறைவாக இருக்கும்....
-
இத்தளத்திற்கு சென்று http://www.aimersoft.com/video-editor.html என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை தறவிரக்கலாம். பலவி...
-
அனைவருக்கும் தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு சில படங்கள் அழகு குறைவாக இருக்கும்...
-
நாளுக்கு நாள் பல சமுகத்தளங்கள் அதிகரித்து வருகிறது. எமது வலைப்பூவுக்கு வரும் வாசகர்கள் வலைப்பூவின் வடிவமைப்பின் அழகில் மயங்கி உங்களது வலைபூ...
-
பேஸ்புக்கில் தான் பலர் அனைத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்நிலையில் நண்பர்களுடன் பேச ஒரு பேஸ்புக் அக்கவுண்ட், குடும்பத்தினர் கூட பேச ஒரு ...
-
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையைக் கொண்டு மொபைலுக்கு சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நு...
-
பெண்ணினத்தை அவமதித்துப் பெருமை பெற நினைத்தவர்கள் பெரும்பாவச் சுமையேற்றுப் பெற்ற துன்பம் உலகறியும் எண்ணி எண்ணிப் பெண் பெருமை ஏற்றிப் புக...
-
இவ்வுலகில் பல வகையான ஒலிகள் உள்ளன. இவற்றில் அனைத்தையும் நாம் கேட்பதில்லை. இவ் இயந்திர உலகில் இவற்றை தேடி கேட்டு இரசிக்க எமக்கு நேரமும் இல்லை...
-
உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு தினமும் ஒரு இலவச டொமைன் . உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் .நீங்கள் விரும்பிய டொமைன் பெயர்உள்ளிடவும்பி...